Soft Skills : கரியரில் வெற்றி வேண்டுமா? - பின்பற்ற வேண்டிய ‘5சி’ வழிமுறைகள்!

நம்முடைய பணியில் சிறப்பாகச் செயல்பட உதவும் பல்வேறு விஷயங் களில் முக்கியமானவை ‘Soft Skills’ எனப்படும் மென்திறன்கள். இந்த மென்திறன்களின் முக்கியத்துவம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இவற்றில்தான் வெற்றிக் கான அடித்தளம் அமைந்துள்ளது என்பதும் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை.

இந்த மென்திறன்களில் தகவல் தொடர்புத் திறன் (Communication Skills), பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் (Interpersonal Skills), தலைமைப் பண்பு (Leadership Skills), பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் (Problem Solving Skills), குழுவாகப் பணிபுரிவது, தொழில் நெறிகளை முறையாகப் பின்பற்றுதல், நேர மேலாண்மை போன்ற அனைத்தும் அடங்கிவிடும்.

‘சாஃப்ட் ஸ்கில்ஸ் (Soft Skills)’ எனப்படும் மென்திறன்களைப் பர்சனல் ஸ்கில்ஸ் (Personal Skills), காமன் ஸ்கில்ஸ் (Common Skills), எசன்ஷியல் ஸ்கில்ஸ் (Essential Skills), கோர் ஸ்கில்ஸ் (Core Skills) எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். இந்த மென்திறன்கள் தான் நாம் மேற்கொள்ளும் வேலையில் வெற்றியடைய அல்லது நமது இலக்கை அடைய வழிகாட்டுகின்றன. இந்த மென்திறன்கள் என்பது தனிப்பட்ட குணநலன்களாகவோ, உணர்வு களாகவோ, மொழி தொடர்பானவை யாகவோ, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவோகூட இருக்கலாம்.

இந்த மென்திறன்களை மேம்படுத்தி, கரியரில் வெற்றிபெற பின்வரும் ‘5சி’ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஸ்மார்ட் வொர்க் ஸ்ட்ராட்டஜி! - 18

கிரிட்டிகல் திங்கிங் (Critical Thinking)

தற்போது நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் தினசரி ஏராளமான தகவல் களைக் கேள்விப்படுகிறோம். வித்தியாச மான பிரச்னைகளைச் சந்திக்கிறோம். இச்சூழலில் நாம் கேள்விப்பட்ட தகவல் கள் அல்லது சந்தித்த பிரச்னைகளை முதலில் வடிகட்டி, அதன் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அதுதொடர்பாக நம்மை நாமே நிறைய கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் செயல்களை, செய்யப்போவதை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மை நாம் எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரே விஷயத்தை பல்வேறு கோணங்களில் பார்த்துப் பழக வேண்டும். அதுகுறித்தும் நிறைய கேள்விகள் கேட்டுப் பழக வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், அதற்கு முன்பு அவை குறித்து முதலில் நமக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். எனவே, நிறைய படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு கலந்தாய்வுகளில் பங்கேற்று பேச்சுத் திறனை அதிகரித்து, வாதத் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ‘Critical Thinking’ என்னும் மாறுபட்ட சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

தகவல் தொடர்புத் திறன் (Communication Skills)

இந்த 21-ம் நூற்றாண்டில் தகவல் தொடர்புத் திறன் என்பது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்றாகும். அதிலும் வீட்டிலிருந்து பணிபுரியும் கலாசாரம் பெருகி யுள்ள இச்சூழலில் தகவல் தொடர்புத் திறன் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், தற்போது பெரும்பாலான தகவல் தொடர்புகள் மின்னணு முறையில் மின்னஞ்சல், வீடியோ கான்ஃபரன்சிங் என மாறிவிட்டது. எனவே, எந்தத் துறையில் பணி யாற்றுபவராக இருந்தாலும் தனது தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்வது என்பது இன்றியமையாததாகிவிட்டது.

முதலில் பிறர் கூறுவதை காது கொடுத்து நன்றாகக் கேட்டுவிட்டு, அதன்பின் அதற்குச் சரியான பதிலைத் தெரிவிக்க வேண்டும். பிறர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசக் கூடாது. அதே போல நமது கருத்துகளைத் தெரிவிக்கும்போது மிக எளிய வார்த்தைகளில் அனைவருக்கும் புரியும்விதமாகப் பேசுவது அவசியமாகும். அதிலும், ஒருவரை நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது நமது முகபாவனை கள், உடல் மொழி என அனைத்துமே தகவல் தொடர்பில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, மேற்குறிப்பிட்ட நடைமுறைகளில் கவனம் செலுத்தினாலே தகவல் தொடர்புத் திறன் சிறப்பானதாக இருக்கும்.

ஸ்மார்ட் வொர்க் ஸ்ட்ராட்டஜி! - 18

கூட்டுத் திறன்கள் (Collaborative Skills)

பிறருடன் இணைந்து பணியாற்றும்போது சிறப்பாக, குழுவாகப் பொது இலக்கை நோக்கிப் பயணிக்க உதவுபவைதான் இந்தக் கூட்டுத் திறன்கள். குழு வேலைகளில் இந்தக் கூட்டுத் திறன்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தக் கூட்டுத் திறன்கள் குழுவுக்குள் மட்டுமன்றி, குழுவுக்கு வெளியேயும் இருக்க வேண்டும்.

வெறும் கடமைக்காக மட்டும் குழுவாகப் பணியாற்றாமல், மனதளவில் குழுவின் பொது நோக்கமான லட்சியத்தை அடையும் பொருட்டு, விட்டுக்கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்தும், விடா முயற்சி யுடனும் பணியாற்ற வேண்டியது அவசிய மாகும். இந்தக் கூட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு தன்னார்வலர்களாகப் பணி புரிவதும், நிறைய குழுப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்வதும் அவசியமாகும். இப்பண்பை வளர்த்துக்கொள்வதற்குக் குழுவை முதலில் கூர்ந்து கவனித்து, அதன் இலக்குகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். குழு உறுப்பினர்களுடன் நட்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்களுக்குத் தர வேண்டிய நம்பிக்கை மற்றும் மரியாதையை தவறாமல் அளிப்பதும் அவசியமாகும். அப்போது தான் குழுவின் நம்பகத்தன்மை, செயல்திறன் போன்ற கூட்டுத் திறன்கள் அதிகரித்து, சிறப் பாகச் செயல்பட முடியும்.

யூனிஸ் கார்டில்யா யாமினி, மனிதவள ஆலோசகர்

புதுமையான சிந்தனை (Creatitvity Thinking)

பணியின்போதோ இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ எதிர்பாராமல் ஏற்படும் சில அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் பிரச்னைகள் போன்ற வற்றை எப்படி புதுமையாக, ஆக்கபூர்வமாக சிந்தித்துக் கையாள்கிறோம் என்பதுதான் கிரியேட்டிவிட்டி. இப்பண்பை வளர்த்துக்கொள்ள நிறைய ‘Brain Storming’ நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். மேலும், கலை, இலக்கியம், இசை போன்றவற்றில் கவனம் செலுத்தினாலும் நமது கிரியேட்டிவிட்டி அதிகரிக்கும்.

தனிநபர் குணாதிசயம் (Character)

ஒரு மனிதனின் தனிப்பட்ட குணாதிசயம் அல்லது அவரது நல்ல பண்புகள்தான் அவரது கேரக்டர் எனப்படுகிறது. பொதுவாகவே, ஒரு நேர்மையான, அன்பான, பொறுமையான மனிதரைத்தான் நற்குணங்கள் நிறைந்த பண்புள்ள மனிதனாக இச்சமுதாயம் கருது கிறது. ஒருவர் நல்ல குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வது என்பது ஓரிரு நாள்களில் நடைபெறும் காரியமல்ல. இது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் நீண்ட கால நடை முறையாகும். இதற்கு நல்ல பழக்கவழக்கங்களும், அவற்றை விட்டுவிடாமல் தொடர்ந்து பின்பற்றும் விடாமுயற்சியும் தேவை. பொறுமையுடனும் பொறுப்புடனும் இருந்து தனது இலக்கை நிர்ணயித்து செயல்படும் ஒரு நல்ல பொறுப்புள்ள மனிதரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எப்போதும் உயர்வாகவே இருக்கும். இப்படி இருப்பவர்கள்தான் வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி முன்னுக்கு வர முடியும்.

(கரியரில் ஜெயிப்போம்)

தொகுப்பு: மு.ராஜதிவ்யா

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.