``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை.. வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான்.

டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிப்பார்கள். இருபது ரூபாய் தேநீருக்கு கூட ஒரு மணி நேரம் உரையாடல் இருக்கும்.

இப்படி இருக்கையில் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில் ”ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் குறித்து விவாதிக்க இது இடமல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்த பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

சாதாரணமாகவே ஒருவரை சந்திக்கிறோம் என்றால் வாருங்கள் தேநீர் அருந்தி கொண்டே அல்லது சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்பார். அது தொழில் ரீதியாகவோ, வேலை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அந்த உரையாடல் இருக்கும். ஆனால் இந்த பெங்களூரு உணவகத்தின் வித்தியாசமான ரூல்ஸ் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.

ஆனால் உணவகம் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், பலர் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு ஏற்றதாகவே கருதுகின்றனர்.

பெரும்பாலும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ஆர்டர்களை மட்டுமே செய்துவிட்டு மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இது உணவகத்தின் வணிகத்தைப் பாதிப்பதாக அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதனால், பெங்களூரில் மட்டுமல்ல பல உணவகங்களிலும் இப்படி அறிவிப்பு செய்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.