இரவில் வந்த கார்; ரூ.1 கோடி மதிப்புள்ள தலை முடி கொள்ளை - என்ன நடந்தது?

பெங்களூரு நகரின் லக்‌ஷ்மிபுரம் க்ராஸ் பகுதியில் உள்ளா குடோனிலிருந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 830 கிலோ மனித முடியை ஒரு கும்பல் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் கூறுவதன்படி, கே.வெங்கடசாமி என்கிற 73 வயது நபர் நீண்டகாலமாக முடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி 12ம் தேதி தன்னிடம் இருந்த சரக்குகளை ஹெப்பால் பகுதியிலிருந்து புதிய சேமிப்புகக் கிடங்கான லக்‌ஷ்மிபுரம் க்ராஸுக்கு மாற்றியுள்ளார். இந்தக் கிடங்கு ஒரு வணிக மையத்தின் கீழ் அமைந்துள்ளது. அங்கிருந்து 27 பைகளில் பதப்படுத்தப்பட்ட முடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Hair

வெங்கடசாமி அளித்துள்ள புகாரின்படி, நள்ளிரவுக்குப் பிறகு 6 கொள்ளையர்கள் மாருதி பொலீரோ எஸ்.யு.வி காரில் வந்து இரும்புக் கம்பியைப் பயன்படுத்திக் கதவுகளை உடைத்து சரக்கு இருந்த மூட்டைகளை காரில் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளை நிகழ்வை அப்போது அருகிலிருந்தவர்கள் பார்த்தபோதிலும் வேலை செய்யும் பணியாளர்கள் என நினைத்துள்ளனர்.

பைகளை மாற்றும்போது அவர்கள் தெலுங்கில் பேசியதால் சந்தேகம் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தப் பக்கம் சென்ற வழிப்போக்கர் ஒருவர், மூட்டைகளில் இருந்து தாறுமாறாக முடி கீழே விழுவதைப் பார்த்து சந்தேகித்து காவல்துறைக்குத் தெரிவித்துள்ளனர்.

Police

ஹொய்சாலா ரோந்து காவலர் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தபோது, கிடங்கின் கதவு (ஷட்டர்) பாதியளவு திறந்திருப்பதைக் கண்டுள்ளனர். அதிகாரிகள் அருகிலிருந்த மற்ற கடை உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வெங்கடசாமிக்கு நள்ளிரவு 1:50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடி வர்த்தகத்தில் தொடர்புடைய யாரோதான் இந்தக் கொள்ளையை நிகழ்த்தியிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக வெங்கடசாமி கூறியுளார். அருகில் இருந்த கட்டடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கொள்ளை சம்பவமும் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பதிவாகியுள்ளது. எனினும் தெளிவான காட்சிகள் இல்லாததால் வண்டியின் எண் மற்றும் முகங்களைப் பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

அதிகாரிகள் குற்றவியல் பிரிவு 305 (திருட்டு), 331 (வீடு, கட்டடங்களுக்குள் அத்துமீறல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.