Jeans: ``ஜீன்ஸ் போடுங்கள், ஆனால் உங்கள் ஜீன்களை மறக்காதீர்கள் - சித்தானந்த சரஸ்வதி அறிவுரை

ஜீன்ஸ் (Jeans) என்பது இன்று எல்லோராலும் விரும்பக்கூடிய உடையாகவும், அழகான தோற்றத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஆடையாகவும் இளம் தலைமுறையினர் மத்தியில் தவிர்க்க முடியதாக ஒன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டது. அதேசமயம், இறுக்கமான ஜீன்ஸ் உடைகளை அணிவதால் உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்களும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

Jeans

குறிப்பாக, ஆண்கள் இறுக்கமான ஜீன்ஸ்களை அணியும்போது, விதைப்பை உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்வதால், விதைப்பையின் வெப்பம் அதிகரித்து விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜீன்ஸ் அணியும்போது தங்களின் ஜீன்களைப் பற்றியும் மறக்காதீர்கள் என்று பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தின் ஆன்மிகத் தலைவர் சித்தானந்த சரஸ்வதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே 2025 கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சித்தானந்த சரஸ்வதி, ``மகா கும்பமேளாவின்போது ஜீன்ஸ் அணிந்திருந்த ஒரு சிறுவன் என்னிடம் வந்து, தான் இப்போது வித்தியாசமாக உணர்வதாகவும், இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்த வேண்டுமா என்றும் என்னிடம் கேட்டார்.

சித்தானந்த சரஸ்வதி

அதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் ஜீன்ஸ் அணிவதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஜீன்ஸ் அணிந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களின் ஜீன்களை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றுதான் நான் கவலைப்படுகிறேன். உங்கள் வேர்களை நீங்கள் மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அது முக்கியமானது." என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.