தொகுதி மறுசீரமைப்பு: `கூட்டு நடவடிக்கைக் குழு - 7 மாநிலத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக மார்ச் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக, த.மா.க தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்று இருந்தன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. மக்கள்தொகைக் குறைவாக இருப்பதால் தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்கும் அபாயம் இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். நமக்குள் எந்த ஒரு வேறுபாடும் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

அனைத்துக் கட்சி கூட்டம்

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு விரைவில் அமைக்கப்படும்" என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார். இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்பாக வரும் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அதாவது முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, பினராயி விஜயன், பக்வத்சிங் மான், சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் சந்திரசேகர் ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

மேலும் கூட்டு நடவடிக்கை குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்கவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார். 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் இங்கே!!!

2026-ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து

(1/2) @mkstalin pic.twitter.com/6WsemLRr7Y

— TN DIPR (@TNDIPRNEWS) March 7, 2025

தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள 22.3.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் - பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

(2/2) #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @mkstalin pic.twitter.com/PEXja9FBmE

— TN DIPR (@TNDIPRNEWS) March 7, 2025

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.