Sripriya: `என்னை முதன் முதலில் கைகளில் ஏந்திய பிரியா அம்மாவுக்கு..! - ராதிகா மகள் ரேயான் பதிவு
நடிகை ராதிகாவின் மகள் ரேயான் ’ஹாப்பி பர்த்டே அம்மா’ என்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் ஒரு போஸ்ட் பதிவிட்டிருக்கிறார். ஸ்வீட் சர்ப்ரைஸாக அந்தப் புகைப்படங்களில் ரேயானுடன் இருப்பது நடிகை ஸ்ரீபிரியா அவர்கள்.
ரேயான் பகிர்ந்துள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகை ராதிகா இருவரும் தங்கள் மகள்களுடன் இருக்கிறார்கள். இன்னொரு புகைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியாவும் ரேயானும் ஒருவரையொருவர் அணைத்தபடி இருக்கிறார்கள்,
`என்னை முதன் முதலில் கைகளில் ஏந்தியவர் நீங்கள்தான்
தன்னுடைய பதிவில், ‘’என் சொந்த அம்மாவை தவிர்த்து நான் அம்மா என்று அழைக்கிற ஒரேயொரு நபர் இந்த உலகில் நீங்கள் மட்டும்தான் பிரியா அம்மா. நான் பிறந்தவுடன் என்னை முதன் முதலில் கைகளில் ஏந்தியவர் நீங்கள்தான்.
அப்படி ஏந்திய உங்களைத்தான் என்னுடைய மனதின் முக்கியமான இடத்தில் நான் எப்போதும் வைத்திருக்கிறேன். என் மீதான உங்கள் அன்பும், அசைக்கவே முடியாத வலிமையான உங்களுடைய ஆதரவும் எனக்கு எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தி உள்ளது. என் வாழ்க்கையின் வழியில் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் எப்போதும் என்னுடனே இருப்பதற்காக உங்களுக்கு என் நன்றி. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்... அது உங்களுக்கும் தெரியும். அதிகபட்ச மகிழ்ச்சியும் இன்னும் பல பயணங்களும் முடிவே இல்லாத சிரிப்பும் உங்கள் வாழ்வில் நிறைய வரட்டும் பிரியா அம்மா’’ என்று பாசம் சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார்.

அழகாக, அருமையாக இருக்கிறது இந்த அம்மா மகள் உறவு. நாமும் சொல்வோம், ஹேப்பி பர்த்டே ஸ்ரீபிரியா மேம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


