Blood Donation: 24 லட்சம் உயிர்களை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன்... இவர் இரத்தத்தில் என்ன ஸ்பெஷல்?

"தங்க கரம் கொண்ட மனிதர் என்று போற்றப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஜேம்ஸ் ஹாரிசன், தனது 88-வது வயதில் மரண மடைந்துள்ளார்.

இவரது வாழ்க்கையில் 1,100 முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்ததே இவரது சிறப்பு பெயருக்குக் காரணம். இவரது இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா 2.4 மில்லியன் டோஸ் ஆன்டி-டி மருந்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளாது. இந்த மருந்துகள் ஆபத்தில் இருந்த பல லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளன.

blood donations

தனிச்சிறப்பு வாய்ந்த ரத்தம்!

ஹாரிசனின் இரத்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது என ஆஸ்திரேலியா ரெட்கிராஸ் கூறுகின்றது. அவரது இரத்தத்தில் உள்ள அரிதான மதிப்புமிக்க ஆன்டிபாடி, ஆன்டி-டி ஊசிகள் தயாரிக்க அவசியமானது.

ஆன்டி-டி ஊசிகள் ஆர்.ஹெச்டி நெகடிவ் (RhD - nehative) உள்ள அம்மாக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தன்மை உள்ள தாய்மார்களின் ரத்தமே கருவை தாக்கக் கூடும். இந்த ஊசிகள் போடாவிட்டால் கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தைக்கு ரத்த சிதைவு நோய் (HDFN) ஏற்பட்டு, மரணத்துக்கு வழிவகுக்கும்.

ஹாரிசன் 1954-ம் ஆண்டு முதன்முதலாக ரத்த தானம் செய்துள்ளார். 2018ம் ஆண்டு அவரது 81 வயது வரை செய்து வந்துள்ளார்.

ஹாரிசனுக்கு அவரது 14 வயதில் நுரையீரல் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அப்போது பல இரத்த மாற்றங்களைப் பெற்றதனால், அவருக்கும் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Australian Red cross

1960களில் ஆன்டி-டி மருந்துகள் கண்டிபிடிக்கப்பட்டதனால் HDFN காரணமாக குழந்தைகள், அம்மாக்கள் பாதிக்கப்படுவது முடிவுக்கு வந்தது. அதுவரை கரு மற்றும் தாயின் இரத்தம் பொருந்தவில்லை என்றால் கரு சிதைவு ஏற்படும் அல்லது குழந்தை இறந்தே பிறக்கும். இப்போது அந்த பிரச்னை ஒரு ஊசியின் மூலம் தீர்வு பெறுவதாக மாறிவிட்டது.

இதில் உள்ள ஒரே ஒரு சிக்கல், ஹாரிசன் போன்ற ரத்த தன்மை கொண்டவர்கள் மிகவும் அரிது. 1999-ம் ஆண்டு ஹாரிசனுக்கு ஆஸ்திரேலியாவின் மெடல் ஆஃப் ஆர்டர் விருது வழங்கப்பட்டது.

ஹாரிசன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாமல் இரத்ததானம் வழங்கினாராம். எந்த செலவும், வலியும் இல்லாமல் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் செயலை அவர் பெருமையுடன் செய்துவந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

அவர் எப்போதும் தான் காப்பாற்றப்போகும் குழந்தை யார் எனத் தெரிந்துகொண்டிருக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு முறை ஒரு குழந்தை காப்பாற்றப்படும் செய்தியும் அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன.

James Harrison

ஆண்டுக்கு 45,000 குழந்தைகள்!

ஆஸ்திரேலுயாவில் 200-க்கும் குறைவான ஆன்டி-டி தானம் செய்பவர்களே உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 45,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காக்கின்றனர். 2 மில்லியன் ஊசிகளுக்கும் மேல் ஹாரிசனின் ரத்தம் பயன்படுத்தப்பட்டிருப்பதைத் தாண்டி, இன்றும் அவரது இரத்தத்தை சேமித்து வைத்துள்ளனர்.

ஆன்டி-டி ஆன்டிபாடிக்களை ஆய்வகத்திலியே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கும் ஹாரிசனின் ரத்தம் உதவியாக இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.