மெட்ரோ ரயிலில் போதையில் மயங்கிய இளைஞர்கள் - 400 போதை மாத்திரைகள் பறிமுதல் - போலீஸ் விசாரணை!
சென்னை சென்ட்ரலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற மெட்ரோ ரயிலில் இரண்டு இளைஞர்கள் போதையில் மயங்கி கிடப்பதாக கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் மெட்ரோ ரயிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இரண்டு இளைஞர்கள் போதையில் சுயநினைவில்லாமல் கிடந்தனர். அதனால் அவர்கள் இருவரையும் போலீஸார் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர். அப்போது இருவரும் போதையிலிருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது 400 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், இளைஞர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். போதை தெளிந்த இளைஞர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திகேயன் எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது மும்பையிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார், போதை மாத்திரை விற்பனை, அதன் நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


