3 வயதில் 5 விருதுகள்; எதிர்கால தலைவர்கள் பட்டியலில் சாதனை படைக்கும் சிறுமி சமர்த்தா..!

சாதனை பட்டியலில் இடம் 10 பிடித்த பேர்

இந்தியாவின் எதிர்கால தலைவர்கள் என்ற பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்து வரும் பத்து பேர் கொண்ட பட்டியலை திரிலோக் மீடியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் டாக்டர் சீமா கார்க் இடம் பிடித்துள்ளார்.

டாக்டர் சீமா கார்க் கடந்த 15 ஆண்டுகளாக முடிமாற்று சிகிச்சையில் சிறந்து விளங்குகிறார். ஆயிரக்கணக்கானோருக்கு வழுக்கை தலையில் மீண்டும் முடி முளைக்க வைத்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் அங்கிதா குப்தா, மரங்களை கொண்டு கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்குகிறார். அதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சிறுமி சமர்த்தா

கேரளாவைச் சேர்ந்த திஜு முந்தகபல்லி பெங்களூரு, கோயபுத்தூரில் படித்துவிட்டு இப்போது துபாயில் வசிக்கிறார். இவர் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் மிகவும் சிறந்து விளங்குகிறார். குழந்தைகள் கதை புத்தகமும் எழுதி இருக்கிறார்.

சோஹாங்க் தார் என்பவர் அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதித்து வருகிறார். டேட்டா சயின்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்கும் சோஹாங்க் சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்.படிப்பை முடித்துள்ளார்.

தமிழ் சிறுமி சமர்த்தா மகாலட்சுமி

இந்த வரிசையில் 8-வது இடத்தில் இருப்பவர் சமர்த்தா மகாலட்சுமி. 14 மாதங்களில் பேசத் தொடங்கிய இந்த சிறுமிக்கு இப்போது 3 வயது. இந்த சிறுமி பொது அறிவு தொடர்பாக எந்த கேள்வி கேட்டாலும் உடனுக்குடன் பதில் சொல்கிறார். உலக நாடுகளின் தலைநகரம், இந்திய மாநிலம், தலைவர்கள் என எதைக்கேட்டாலும் பதில் சொல்வதில் சிறந்து விளங்குகிறார்.

தாயாருடன் போட்டியில் சமர்த்தா

இதற்காக சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு 5 விருதுகளை பெற்றுள்ளார். இந்திய ஜீனியஸ், மகாராஷ்டிரா மகள், மகாராஷ்டிரா ரத்ன புரஷ்கர் விருதுகளையும் பெற்று சாதனை புரிந்து வருகிறார். தமிழ் சிறுமியான இவர் மும்பை தாராவி மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் வசித்து வருகிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.