ஹரியானா: சூட்கேஸில் சடலமாக காங்கிரஸ் இளம்பெண் பிரமுகர்... காதலன் செய்த கொடூரம்.. நடந்தது என்ன?
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேஸ் ஒன்றை போலீஸார் சோதித்து பார்த்தபோது, பெண் ஒருவரின் உடல் அதனுள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அப்பெண் காங்கிரஸ் கட்சியைச் பிரமுகர் ஹிமானி என்று தெரிய வந்தது. ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை மேற்கொண்ட போது அவருடன் ஹிமானி யாத்திரையில் பங்கேற்று பிரபலமானார்.
அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவரை கட்சி பிரமுகர்கள் கொலை செய்தனரா என்ற கேள்வி எழுந்தது. ஹிமானியை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை இறுதிச்சடங்குகளை செய்யமாட்டோம் என்று ஹிமானியின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
காதலன் கொலை செய்தது ஏன்..?
விசாரணையில் ஹிமானியை கொலை செய்ததாக சச்சின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சச்சினை போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் ஹிமானியின் மொபைல் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சச்சினிடம் போலீஸார் விசாரித்தபோது, ஹிமானியும், சச்சினும் சில காலமாக உறவில் இருந்து வந்துள்ளனர்.
ஹிமானி தன்னை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் விரக்தியடைந்து அவரை அவரது வீட்டில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹிமானியின் தாயார் அளித்திருந்த பேட்டியில், தனது மகள் குறுகிய காலத்தில் கட்சியில் வளர்ச்சியடைந்ததால் கட்சியில் சிலருக்கு பொறாமை இருந்தது என்றும், எனவே இக்கொலையில் கட்சியில் உள்ள சிலர் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


