Rashmika Mandanna: `ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? - மிரட்டும் கர்நாடக காங்கிரஸ் MLA
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களுருவில், மார்ச் 1 முதல் மார்ச் 8 வரை 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா (Bengaluru International Film Festival) நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், கன்னட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது கோபமாக இருப்பதாகவும், சினிமா ஒரு சிலருக்கானதல்ல... அரசின் ஆதரவு முக்கியம் என்றும் எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா (பாஜக), ``சினிமா நடிகர்கள் ஒன்றும் உங்கள் அடிமைகள் அல்ல. மாநிலத்தில் தொடங்கப்படும் எந்தவொரு இயக்கத்தையும் ஆதரிப்பது நடிகர்களின் தனிப்பட்ட விருப்பம்." என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், 2016-ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமா கரியரைத் தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளாததற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா கடுமையாக சாடியிருக்கிறார்.
சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரவி கனிகா, `` ராஷ்மிகா மந்தனா தனது சினிமா கரியரை, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார். பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளுமாறு அவரைக் கடந்த ஆண்டு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். ``என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியாது, எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது" என்று அவர் கூறிவிட்டார்.

எனக்குத் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 10, 12 முறை அவரது வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். தன்னுடைய கரியரை இங்கு தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை அவர் புறக்கணித்துவிட்டார். அதற்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?" என்று கூறினார்.
டி.கே. சிவக்குமார் நேற்று முன்தினம் அவ்வாறு கூறியிருந்த நிலையில், அவரின் கட்சியைச் எம்.எல்.ஏ ரவி கனிகா இன்று ராஷ்மிகா மந்தனாவைக் குறிப்பிட்டு மிரட்டல் தொனியில் பேசியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


