`அவசியம் வந்தா... நானே டீடெய்லா பொதுவெளியில் சொல்லுவேன்’ - சர்ச்சைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில்
மாதம்பட்டி ரங்கராஜ்... இன்று இவரைத் தெரியாத தமிழ்நாட்டுப் பிரபலங்களே இருக்க மாட்டார்கள். அரசியல் பொதுக்குழுக்களா, அரசியல்வாதிகள் வீட்டு விசேஷங்களா, சினிமா ஃபங்ஷன்களா எங்கும் இவரின் சமையல் ராஜ்ஜியம்தான். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் இந்தப் பகுதியில் சின்னதாக கேட்டரிங் பிசினஸ் தொடங்கி நடத்தி வந்தார்.
நாளடைவில் பிசினஸ் வளர்ந்து இன்று மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் என்றாலே ஒரு தனி கௌரவம் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளார்.
மேலும் மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் சினிமா ஏரியாவிலும் கால் பதித்தார். கடந்தாண்டு விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி மூலம் சின்னத்திரை என்ட்ரியையும் நிகழ்த்தினார்.
இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இவர் குறித்து சர்ச்சை கிளப்பும் நிறையத் தகவல்கள் பரவி வந்தது. அதாவது ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார், தனது ஆடை வடிவமைப்பாளரை திருமணம் செய்ய உள்ளார் ரங்கராஜ் என்பன போன்ற தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தகவல்களை நிஜமாக்குவது போல் ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளரான ஒரு பெண், கடந்த காதலர் தினத்திலிருந்து சமூக வலைதளத்தில் ரங்கராஜை மை மேன் எனக் குறிப்பிட்டிருப்பதுடன் ரங்கராஜ் பெயரை தன் பெயருடன் சேர்த்தும் பதிவிட்டு வருகிறார்.
இதற்குப் பதிலளிப்பது போல் இன்னொருபுறம் ஸ்ருதியும் கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு நானே அவருடைய மனைவி எனப் பதிவிட்டதும் நடந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் தொடர்பாக ரங்கராஜையே தொடர்பு கொண்டு பேசினோம்...

பொது வெளியில், அதாவது குறிப்பாக சமூக ஊடகங்கள்ல வெளி வர்ற தகவல்கள் குறித்து எனக்குமே தெரியும். என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. சில விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. அது பத்தியெல்லாம் நான் ஏன் பேசணும்னு ஒரு கேள்வி இருக்கில்லையா? அதேநேரம் அவசியம் பேசியே ஆகணும்கிற ஒரு காலகட்டம் வந்தா அப்ப நானே டீடெய்லா அதைப் பொதுவெளியில் சொல்லுவேன் என்றவரிடம்,
உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா? உங்க ஆடை வடிவமைப்பாளர் உங்கள் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துப் பதிவுகள் போட்டிருக்காரே என்ற கேள்வியையும் வைத்தோம்.
என் குடும்பத்துல எந்தவொரு பிரச்னையும் இல்லை. ரொம்ப பர்சனலான விஷயங்கள் பத்தி இப்ப எதுவும் பேச விரும்பலை என முடித்துக் கொண்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


