Oscars 2025 Winners List: ANORA-வுக்கு ஐந்து ; DUNE: PART 2-க்கு இரண்டு - முழுப் பட்டியல் இங்கே!
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ). இத்திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு.
இதை தாண்டி புரூட்டலிஸ்ட் (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. விக்கட் (WICKED) என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்பிளிட் அன்னோன்(A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.
எமிலியா பெரெஸ், விக்கட் , டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் திரைப்படங்களெல்லாம் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி இருப்பதால் இத்திரைப்படங்கள் இடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா (PRIYANKA CHOPRA) மற்றும் குனீத் மோங்கா (GUNEET MONGA) தயாரித்த `அனுஜா என்ற குறும்படம் மட்டும் `சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) பிரிவில் தேர்வாகியிருந்தது.
இந்நிலையில் இந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் என்னனென்ன திரைப்படங்கள் விருதினை வென்றுள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போம். இதுவரை அறிவிக்கப்பட்ட விருதாளர்களின் பட்டியல் இதோ!
சிறந்த திரைப்படம் - ANORA
சிறந்த இயக்குநர் - Sean Baker (Movie - ANORA)
சிறந்த நடிகை - MIKEY MADISON (Movie - ANORA)
சிறந்த நடிகர் - ADRIEN BRODY (Movie - ADRIEN BRODY)
சிறந்த திரைக்கதை - Sean Baker (Movie - ANORA)
சிறந்த ஒளிப்பதிவு - Lol Crawley (Movie - THE BRUTALIST)
சிறந்த படத்தொகுப்பு - Sean Baker (Movie - ANORA)
சிறந்த துணை நடிகை - Emilia Pérez (Movie - ZOE SALDAÑA)

சிறந்த துணை நடிகர் - KIERAN CULKIN (Movie - A Real Pain)
சிறந்த பாடல் - EL MAL (Movie - Emilia Pérez; Music by Clément Ducol and Camille)
சிறந்த பிண்ணனி இசை - Daniel Blumberg (THE BRUTALIST)
சிறந்த ஆவணப்படம் - NO OTHER LAND
சிறந்த ஆவணக் குறும்படம் - THE ONLY GIRL IN THE ORCHESTRA
Best International Feature Film - im still here (BRAZIL)
Best Animated Feature Film - Movie - FLOW
Best Animated Short Film - IN THE SHADOW OF THE CYPRESS
Best Production Design - Movie - WICKED
Best Sound - Movie - DUNE: PART TWO (Gareth John, Richard King, Ron Bartlett and Doug Hemphill)

Best Visual Effects - Movie - DUNE: PART TWO
Best Adapted Screenplay - Peter Straughan (Movie - CONCLAVE)
Best Live Action Short Film - Victoria Warmerdam and Trent ( Movie - IM NOT A ROBOT)
Best Makeup and Hairstyling - Movie - THE SUBSTANCE (Pierre-Olivier Persin, Stéphanie Guillon and Marilyne Scarselli)
Best Costume Design - Paul Tazewell (Movie - WICKED)
ANORA திரைப்படம் 5 விருதுகளையும், DUNE: PART TWO திரைப்படம் இரண்டு விருதுகளையும் வென்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


