Career: இந்த இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறீர்களா? அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் ஆய்வு மற்றும் அப்ளிகேஷன் மையத்தின் சி.எஸ்.ஆர் திட்டமான "TRAI_FHS: Trustworthy and Responsible Artificial Intelligence Models for Financial and Healthcare Sectors with Improvised Performance-ல் இன்டர்ன் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 10
எத்தனை மாதங்கள்: 6 மாதங்கள்
கல்வி தகுதி: இளங்கலையில் B.E CSE, B.Tech IT அல்லது B.Tech AI & DS
முதுகலையில் M.E CSE, M.Tech IT அல்லது M.Tech AI & DS
*தற்போது படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.10,000
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதலில், ரெஸ்யூம் மற்றும் திட்டம் குறித்த இரண்டு பக்க புரோபோசலை அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3, 2025.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இ மெயில் ஐடி: caindra@annauniv.edu
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
