Congo unknown illness: காங்கோவில் மர்ம நோய்த்தொற்று; 48 மணி நேரத்தில் மரணம்... என்னக் காரணம்?
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம நோயினால் கடந்த ஐந்து வாரத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஜனவரி 21-ம் தேதி முதல் 419 நபர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், இதுவரை 53 இறப்புகள் பதிவாகியுள்ளது. 48 மணி நேரத்திற்குள் நோய் பாதித்தவர் இறப்பதால், நோய்ப்பரவல் குறித்து அங்குள்ள மருத்துவர்களும் உலக சுகாராத அமைப்பைச் சேர்ந்தவர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காங்கோவில் உள்ள போலோகோ கிராமத்தில், வவ்வாலை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் காய்ச்சலும் ரத்தக்கசிவும் ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள். இந்த சிறுவர்களிடமிருந்துதான் இந்த மர்ம தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மர்ம நோய் பரவ ஆரம்பித்ததும், நோய் பாதிப்புக்குள்ளான 13 நபரின் மாதிரிகளை ஆய்வுக்காக காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சில மாதிரிகளில் மலேரியா இருப்பதாக பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு, காங்கோவின் மற்றொரு பகுதியில் பல இறப்புகளை ஏற்படுத்திய மர்ம காய்ச்சல், மலேரியா நோயாக இருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது பரவிக்கொண்டிருக்கும் மர்ம நோயின் அறிகுறிகள் எபோலோ, மார்பர்க், டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகளோடு ஒன்றி இருப்பினும், இது ரத்தக்கசிவு நோய்த்தொற்று அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு விலங்குகள் அதிகமாக உண்ணப்படும் இடங்களில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்ப்பரவல் வருவது என்பது நீண்ட காலமாகவே நடைபெறுவதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இது போன்ற நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் 2022-லேயே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நோய்ப்பரவல் குறித்த காரணியை நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
