மூன்றரை வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது; சீர்காழி அதிர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவர் மூன்றரை வயதான தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்திருப்பதுடன் அவரே அங்கன்வாடியில் விட்டு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் கூலித் தொழிலாளியின் உறவினரான 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் சிறுமியை அங்கன்வாடியில் விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட பின்பு தட்டை கண்க்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு தட்டு குறைந்துள்ளது. சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்ற குறிப்பிட்ட அந்த சிறுமி காணாததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர் பணியாளர்கள். மேலும் அப்பகுதியில் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறுமிக்கு தலை மற்றும் இடது கண் அடிப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சிறுமியை தூக்கி கொண்டு பிரதான சாலைக்கு வந்துள்ளான்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் என்னவென்று விசாரித்துள்ளர். அதற்கு டூவீலர் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அதனால் அடிப்பட்டதாக சொல்லியுள்ளான். இதற்கிடையே சிறுமி காணாமல் போன விவகாரம் அங்கன்வாடி மையம் மற்றும் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. உடனே சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் உறவினரான அந்த 16 வயது சிறுவன் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், அவனிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் சொன்னதை கேட்டு போலீஸாரே அதிர்ந்து விட்டனர். இது குறித்து சிலரிடம் பேசினோம், ``சிறுமியை கொண்டு வந்து விட வந்த சிறுவன் மீண்டும் வீட்டுக்கு செல்லாமல் அங்கன்வாடிக்கு அருகிலேயே இருந்துள்ளான். சாப்பிட்ட பிறகு கை கழுவ வந்த சிறுமியை அருகில் உள்ள கட்டடத்துக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

அப்போது அந்த சிறுமி சத்தமாக அழுதுள்ளார். உடனே இவன் கல்லை எடுத்து இடது கண் மற்றும் தலையில் அடித்துள்ளான். இதில் சிறுமியன் கண் கடுமையாக பாதிக்கப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. பின்னர் கொஞ்சமும் பயமில்லாமல் எதுவும் நடக்காதது போல் அந்த சிறுவன், சிறுமியை தூக்கி கொண்டு வந்துள்ளான். நடுங்க வைக்கும் இந்த செயலை செய்த சிறுவனை சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ வழக்கில் பிடித்திருக்கின்றனர். சிறுமிக்கு நடந்த கொடுமை போலீஸாரையே கலங்க வைத்து விட்டது" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.