தூத்துக்குடி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு; தப்ப முயன்ற நபரைச் சுட்டுப்பிடித்த போலீஸ்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கைக் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்... மதுபோதையில் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தடயவியல் மற்றும் கைரேகை பிரிவினர் வருகை தந்து தடயங்களை கைப்பற்றினர். மேலும் மோப்பநாய் ’சுனோ’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம், மாரியப்பன் ஆகிய இரு இளைஞர்களை போலீஸார் தேடிவந்த நிலையில், நேற்று 24-ம் தேதி இரவு வீரவாஞ்சி நகர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்யச் சென்றனர்.
அப்போது இருவரும் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் மாரியப்பன் கீழே விழுந்தில் காலில் முறிவு ஏற்பட்டது. மாரிச்செல்வம் தப்பியோடி விட்டார். தப்பியோடிய மாரிச்செல்வத்தை போலீஸார் தேடி வந்த நிலையில், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளி தேரிப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று மாரிச்செல்வத்தை கைது செய்ய முயன்றனர்.

ஆனால், போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் ராஜபிரவு, மாரிச்செல்வத்தின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவில் துப்பாக்கியால் குற்றவாளியை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


