நீராடும் வீடியோ; 3 மாதகாலத் திட்டம்; கும்பமேளாவைப் பயன்படுத்திக்கொண்ட கொலையாளி; அதிரவைக்கும் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு வரும் யாத்ரீகர்கள் தங்குகிற ஒரு ஹோட்டலின் குளியலறையில் 40 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டது. அதைத் தொடர்ந்து விசாரணையையும் தொடங்கியது.
கும்பமேளா

டெல்லியின் திரிலோக்புரியைச் சேர்ந்த தம்பதி அசோக் - மீனாட்சி. இருவரும் கடந்த 18-ம் தேதி மகா கும்பமேளாவில் புனித நீராடச் சென்றிருக்கின்றனர். நீராடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்திருந்தார் அசோக். இதற்கிடையில், தன் மகன்களான அஸ்வானி, ஆதர்ஷை தொடர்புகொண்டு, `மனைவியைக் காணவில்லை... எங்கு தேடியும் கிடைக்கவில்லை... எனக் கூறியிருக்கிறார். உடனே, அவரின் மகன்களும், மீனாட்சியின் சகோதர் பிரவேஷ் குமாரும் சமூக ஊடகங்களில் மீனாட்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்து, காணவில்லை" எனக் குறிப்பிட்டு தேடிவந்தனர்.

இந்நிலையில்தான், குளியலறையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஹோட்டல் உரிமையாளரிடம் தங்கியிருந்தவர்களின் அடையாளம், ஆதார் எண் குறித்து விசாரித்திருக்கின்றனர். ஆனால், உரிமையாளர் எந்த ஆதாரத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அப்படியே தங்கவைத்திருந்ததும, அந்தப் பெண்ணுடன் ஓர் ஆண் வந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி கேமரா மூலம் உடன் தங்கியநபரைத் தேடிவந்தது காவல்துறை.

கொலை
கொலை

இதற்கிடையில், காணாமல் போன மீனாட்சியின் உடல்தானா அது என்பதை அறிந்துகொள்ள மீனாட்சியின் சகோதர் பிரவேஷ் குமாரை அழைத்து விசாரித்தது. அப்போதுதான் அது மினாட்சியின் உடல் என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, காவல்துறை மீனாட்சியின் கணவர் அசோக்கை தேடி 21-ம் தேதி கைது செய்தது. அதைத் தொடர்ந்து வெளியான தகவல்கள்கள் எல்லாம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்.

18-ம் தேதி மனைவியுடன் கும்பமேளாவுக்குப் புறப்பட்ட அசோக், கும்ப மேளாவில் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதாகச் சுற்றி இருப்பவர்களையும், உறவினர்களையும் நம்ப வைத்திருக்கிறார். அதன்பிறகு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருக்கின்றனர். மீனாட்சி குளிக்கச்சென்ற்போது பின்னாலிருந்து அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். தன் ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், ஆயுதத்தையும் புத்திசாலித்தனமாக மறைத்திருக்கிறார்.

காவல்துறை

அதன்பிறகே தன் குடும்பத்தாரிடம் பொய் சொல்லி அவர்களையும் நம்பவைத்திருக்கிறார். மேலும், விசாரணையில், அசோக் குமாருக்கு வேறு ஒருபெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. அவருடன் நிரந்தரமாக வாழ்ந்துவிடத் தடையாக இருக்கும் மீனாட்சியை கடந்த மூன்று மாதமாக கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். அதற்குச் சாதகமாக இந்தக் கும்பமேளாவைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து காவல்துறை அசோக் குமாரைக் கைது செய்திருக்கிறது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here:  https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.