நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை; கர்ப்பிணிக்கு உதவிய விமானப் பணிப்பெண்.. வைரலாகும் புகைப்படம்!
மேற்கு ஆப்ரிக்காவின் தாக்கரில் இருந்து பெல்ஜியம் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு நடுவானிலேயே குழந்தை பிறந்துள்ளது.
தாக்கரில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார். தனது விமான பயணத்தின் போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்த விமான ஊழியர்களிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த மருத்துவர் உதவியுடன் விமான பணிப்பெண் ஜோய் அந்தப் பெண் பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற உதவியுள்ளார்.
நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை விமான பணிப்பெண் கையில் வைத்திருக்கும் போது அருகில் அவரது தாய் ஓய்வெடுக்கும் புகைப்படம் பார்ப்போரின் மனதை நெகிழச் செய்துள்ளது. இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அந்த விமான பணிப்பெண் ஜோயி கூறுகையில், ”ஒரு விமான ஊழியராக மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் வாழ்க்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது, இது எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த அனுபவம்” என்று கூறியிருந்தார். விமான பணிப்பெண்ணின் இந்த பங்கு, விமான பயணங்களின் போது பயணிகளுக்கு உதவுவதை தாண்டியது என்று பலரும் அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
குழந்தைக்கு FANTA எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாய் வலியால் துடித்தபோது விமானத்தை மீண்டும் தாக்கருக்கே திருப்பியுள்ளார் விமானி. ஆனால் அதற்குள் விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


