Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கணவர் சதீஷ் நடுவட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று காலை சென்றுள்ளார். மனைவி ஷாலினி குழந்தைகளைப் பராமரித்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் விளையாடி வந்த நிலையில், நீண்ட நேரமாகக் குழந்தைகளின் நடமாட்டம் தென்படவில்லை. பதற்றமடைந்த தாய் ஷாலினி, அருகில் உள்ள பகுதிகளில் தேடியுள்ளார்.

உறவினர்கள்

எங்கும் தென்படாத நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிராமம் முழுக்க தேடியிருக்கிறார். தங்கள் குடியிருப்பு அருகில் விவசாய பயன்பாட்டிற்காக உள்ள கிணற்றைத் தாய் ஷாலினி எட்டிப் பார்த்துள்ளார், நித்தீஷ், பிரிநிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் கிணற்றுக்குள் சடலமாக மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதைக் கண்டு பதறிய கிராம மக்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தைகளின் இறப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சதீஷ்- ஷாலினி தம்பதியின் இரண்டு குழந்தைகளும் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஊட்டியைச் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Vikatan Whatsapp Channel

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here:  https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.