PAK v IND: இப்படியொரு மோசமான பாகிஸ்தான் அணியைப் பார்த்ததில்லை - ஹர்பஜன் சிங் விமர்சனம்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான போட்டி துபாயில் இன்று நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இப்படியொரு மோசமான பாகிஸ்தான் அணியைப் பார்த்ததே இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
ஹர்பஜன்சிங் பேசுகையில், “இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மோசமான பாகிஸ்தான் அணியை நான் பார்த்ததே இல்லை. நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது எங்களுக்கு எப்போதுமே பாகிஸ்தான் நம்மை வீழ்த்தி விடுவார்களோ என்ற ஒரு எண்ணம் இருக்கும். ஏனென்றால் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தார்கள். முன்பெல்லாம் ஆட்டத்தையே மாற்றக்கூடிய பேட்ஸ்மேன்கள், பௌலர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடினார்கள். ஆனால் தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணியில் போட்டியை வெல்லக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், அணியில் ஒற்றுமை என்பதே இல்லை.
தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணியில் கூட தனி ஆளாக நின்று போட்டியை வெல்லக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஒரு ஒற்றுமை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

முன்பிருந்த பாகிஸ்தான் அணிக்கும் இப்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளுமே நல்ல பேலன்ஸ் உடன் இருந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானைத் தாண்டி இந்தியா சென்றுவிட்டது" என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
https://bit.ly/VikatanWAChannel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


