PAK v IND: பாகிஸ்தானை வீழ்த்த 300 ரன்கள் போதும்... - கில் சொல்லும் வின்னிங் சீக்ரெட் இதுதான்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அந்த அணி இழக்கும் என்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, கிட்டதட்ட சாம்பியன்ஸ் டிராபி காலிறுதி ஆட்டம் போலவே நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால், அரையிறுதி வாய்ப்பு நழுவ விடும். இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதியைக் கிட்டதட்ட உறுதிசெய்துவிடும். இந்நிலையில், போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
பாகிஸ்தானை வீழ்த்த எத்தனை ரன்கள் தேவைப்படும் எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பதில் கூறிய சுப்மன் கில், “என்னைப் பொறுத்த வரைக்கும் துபாய் மைதானத்தில் 300 ரன்களில் இருந்து 325 ரன்கள் வரைக்கும் ரன்கள் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த மைதானத்தைப் பொறுத்தவரைக்கும் 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலே நல்ல ஸ்கோர்தான்.
ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் தான் அதிக ரன்களை குவிக்க வேண்டியதாக இருக்கும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பு என்பது சுலபமாக இருக்கும். ஆக்ரோஷத்துடன் விளையாட வேண்டும். அப்போதுதான் ரன்கள் அடுத்தடுத்து வேகமாக குவிக்க முடியும். ரோகித் பாய் அதிகமாக ஸ்கை ஷாட்ஸ் அடித்து ஆடுகிறார். ஆனால் நான் கிரவுண்டில் கேப்பில் வைத்து பவுண்டரி அடிக்க விரும்புகிறேன்.

கடந்த போட்டியில் நாங்கள் விளையாடியபோது காற்றில் ஈரப்பதம் இல்லை. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போதும் ஈரப்பதம் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். எனவே டாஸ் இங்குப் பெரிய பிரச்னையே கிடையாது. ஆனாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு, நிச்சயம் பெரிய அழுத்தம் இருக்கும். சேஸிங் செய்வது கடினமாக இருக்கும்.” என்று கூறினார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


