Dhoni : ``பட்டர் சிக்கனும் பட்டர் பனீரும் ஒன்றல்ல... - வைரலாகும் தோனியின் ஃபேவரைட் டிஷ் வீடியோ

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனியை எந்த அளவுக்கு தெரியுமோ, அதே அளவுக்கு அவர் ஒரு சிக்கன் பிரியர் என்றும் தெரியும். அவரே பல இடங்களில் அதைக் கூறியிருக்கிறார். முன்னாள் இந்தியா வீரர் ராபின் உத்தப்பா கூட, ``ரெய்னா, இர்பான் பதான், ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா, முனாஃப் படேல், தோனி மற்றும் நான் ஹோட்டலுக்கு சென்றால், டால் மக்னி, பட்டர் சிக்கன், ஜீரா ஆலு, கோபி மற்றும் ரொட்டிகளை ஆர்டர் செய்வோம்.

தோனி - சஞ்சு சாம்சன்

சாப்பாடு விஷயத்தில் தோனி கண்டிப்பானவர். பட்டர் சிக்கனில் கிரேவியை மட்டும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவார். சிக்கன் சாப்பிடும்போது ரொட்டி சாப்பிட மாட்டார். சாப்பிடும் விஷயத்தில் அவர் மிகவும் வித்தியாசமானவர்." என்று முன்பு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் தோனியும் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பட்டர் சிக்கன் குறித்து தோனி பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனியிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர், ``எந்த உணவை ஒருபோதும் வேண்டாமென்று சொல்ல மாட்டீர்கள்?" என்று கேள்வி கேட்பார். அதற்கு, ``பட்டர் சிக்கன்" எனப் பதிலளிக்கும் தோனி, ``தொடர்ச்சியாகவெல்லாம் சாப்பிட மாட்டேன். 2004-ல் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். 2005 முதல் இந்தியா மற்றும் பல்வேறு இடங்களில் விளையாடத் தொடங்கினோம். அப்போது, ஹோட்டல்களில் ஒரு பட்டர் சிக்கன், ஒரு ரொட்டி, ஒரு மில்க் ஷேக் மதியமும், இரவும் ஆர்டர் செய்வேன்.

Question: One dish which you can never say no to?

MS Dhoni said "Butter Chicken". pic.twitter.com/pRuMFpQd6w

— ZAIDI NEXUS (@kashifzaidi49) February 22, 2025

இரண்டாவது நாள் கால் செய்யும்போது `அதே ஆர்டரா என்று கேட்பார்கள், நானும் சிரித்துக்கொண்டே ஆம் என்று சொல்வேன். முக்கியமாக, அதில் சிக்கன் சாப்பிட மாட்டேன். அந்தக் கிரேவியில் ரொட்டி தொட்டு சாப்பிடுவேன்" என்று கூறுவார். அப்போது, ``அதற்கு பட்டர் பன்னீரும் சாப்பிடலாம், தெரியுமா உங்களுக்கு" என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும்போது, ``இரண்டும் ஒன்று கிடையாது." என்று தோனி சொல்வார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.