Tovino: பட புரொமோஷனுக்கு டொவினோ ஹெலிகாப்டர் கேட்டாரா? - சர்ச்சைகளுக்குத் தயாரிப்பாளர்கள் பதில்
ஒரு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் டொவினோ தாமஸ் ஹெலிகாப்டர் கேட்டதாகக் கூறப்படும் செய்தி, மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸும் இணைந்து நடித்த படம் ஐடென்டிட்டி. ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒரு விவாதம் நடத்தியது.
அதில் பேசிய இயக்குநர் வினு கிரியாத், ``திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்விக்கு முக்கியக் காரணம் நடிகர்களின் சம்பளம். சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு அந்தப் படத்தில் நடித்த நடிகர் ஹெலிகாப்டர் கேட்டிருக்கிறார்" எனப் பெயர் குறிப்பிடாமல் பேசினார். அந்த நடிகர் டொவினோ தாமஸ்தான் என சினிமா வட்டாரத்தில் வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (KFPA) இணைச் செயலாளர் சந்தீப் சேனன், ``நடிகர் டொவினோ தாமஸ் எப்போதும் தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் நடிகர். சமீபத்தில் ஹெலிகாப்டர் பற்றிய ஒரு கதையைக் கேள்விப்பட்டேன். உண்மையில் டொவினோ தாமஸ் அப்படியானவர் அல்ல.
தயாரிப்பு செலவுகளை அதிகரிக்க விரும்பமாட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். டொவினோ தாமஸின் பெயரில் இந்த தவறான தகவலைப் பரப்புவதை அனைவரும் நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். டொவினோ எப்போதும் தயாரிப்பாளர்களால்தான் வழிநடத்தப்படுகிறார். அவர் இன்னும் ஐடென்டிட்டி தயாரிப்பாளருடன்தான் இருக்கிறார். சகோதரர்களுக்கு இடையே பிரச்னைகள் இருக்கும், பிரச்னைகள் தீர்க்கப்படும்..." என்றார்.
ஐடென்டிட்டி திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் ராஜு மல்லியத், "உண்மையைக் கூறவேண்டுமானால் டொவினோ தாமஸ் இந்தப் படத்துக்கான சம்பளத்தைக் கூட முழுமையாகப் பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிறியளவிலான முன்பணம் மட்டுமே கொடுத்தோம். நிதி நெருக்கடி காரணமாகப் படம் வெளியான பிறகு மீதி பணத்தைப் பெற்றுக்கொள்வதாக அவரே ஒப்புக்கொண்டார். புரொமோஷன் நிகழ்ச்சிக்கான யோசனை இணைத் தயாரிப்பாளர் சிஜே ராய்யுடையது. அவரே அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்" என்றார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


