WPL: அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாது..! - தமிழக வீராங்கனை கமலினி நெகிழ்ச்சி

சமீபத்தில் மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 143 ரன்கள் எடுத்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் திருப்பி இருந்தார் தமிழகத்தைச் சேர்ந்த கமலினி.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்

தற்போது மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் இடம் பெற்றிருக்கும் கமலினி  மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை அணி நிர்வாகம் கிரிக்கெட் தொடர்பாக கமலினி பேசியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் கமலினி, “ மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் முதல் நாள் நான் விளையாடியதை என் வாழ்வில் மறக்க முடியாது. அந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன். எனக்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. எனக்கு சிறுவயதில் ஸ்கேட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் நிறைய மெடல்களையும், கோப்பைகளையும் வாங்கி இருக்கிறேன். ஆனால் கிரிட்கெட்டை எனது 12 வயதில்தான் தொடங்கினேன். ஒருநாள் எனது அண்ணன் கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்தேன்.

View this post on Instagram

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

பிறகு கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருப்பதாக எனது தந்தையிடம் சொன்னேன். அப்பா ஓகே சொல்லிவிட்டார். பேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. கிரிக்கெட் பயிற்சிக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துவிட்டோம். ஒருநாள் விக்கெட் கீப்பர் ஒருவருக்கு அடிபட்டிருந்தது அப்போது அவருக்கு பதில் நான் விளையாடினேன். நான் நன்றாக விளையாடியதைப் பார்த்து எனது பயிற்சியாளர் அணியில் தேர்வு செய்தார். அதன்பிறகு U19 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றேன். தற்போது மும்பை அணிக்காக விளையாடுகிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.