3 நிமிட பாடலுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்; நடிகை ஊர்வசிக்கு கம்பேக்காக அமைந்த Daaku Maharaaj!
சமீபத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டேலா நடித்த டாக்கு மகாராஜா என்ற தெலுங்கு படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. வெறும் மூன்று நிமிடம் ஓடக்கூடிய பாடலில் நடிக்க ஊர்வசி ரூ.3 கோடி கட்டணமாக வசூலித்து இருக்கிறார். டாக்கு மகாராஜா படம் ஏற்கனவே ரூ.125 கோடியை வசூலித்துவிட்டது. இந்த அளவுக்கு படம் வெற்றி பெறுவதற்கு ஊர்வசி நடித்த டபிடி திபிடி என்று தொடங்கும் பாடல்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி.தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு ஊர்வசி ரௌட்டேலா நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. ஆனாலும் இப்போது டாக்கு மகாராஜா பெரிய அளவில் வெற்றி பெற்று இருப்பதால் ஊர்வசியின் புகழ் உச்சிக்கு சென்று இருக்கிறது. அவர் நடித்துள்ள படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தாலும் அவருக்கு ரூ.236 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு அவர் சொத்து சேர்ப்பதற்கு சோசியல் மீடியா முக்கிய காரணமாகும். இன்ஸ்டாகிராம் சோசியல் மீடியாவில் மட்டும் அவருக்கு 73 மில்லியன் பாலோவர்கள் இருக்கின்றனர். இதனால் சோசியல் மீடியா மூலம் கணிசமான வருமானம் வருகிறது. அதோடு கடை திறப்பு, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமும் கணிசமாக வருமானம் ஈட்டி வருகிறார். இதனால் அவரால் இந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடிந்தது. 2013ம் ஆண்டு சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் ஊர்வசி பாலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


