Dhoni: ``இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்... -தோனி ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும்   எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தோனி - சஞ்சு சாம்சன்

அப்போது தோனியின் ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி குறித்து பேசிய சாம்சன், “ தோனி, ஐபிஎலில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்று மக்கள் எப்போதெல்லாம் சொல்கிறார்களோ, அப்போதெல்லாம், இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய் (Thoda Aur) என்றுதான் சொல்லத்தோன்றும். இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே…” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.