February: லீப் இயரை விமர்சையாக கொண்டாடும் உலகின் 7 நகரங்கள்!
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒருமுறை இந்த லீப் இயர் வரும். அதாவது அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும். இந்த சிறப்பு நிகழ்வை உலகம் முழுவதும் எண்ணற்ற இடங்கள் கொண்டாடுகின்றன. அப்படி லீப் ஆண்டைக் கொண்டாடும் 7 இடங்கள் குறித்து பார்ப்போம்.

அயர்லாந்து
அயர்லாந்தில், லீப் இயரில் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி Bachelors Day என்று அழைக்கப்படுகிறது. அப்போது ஒரு பண்டிகை சூழலே அங்கு நிலவும்.

அந்தோனி (Anthony), டெக்சாஸ்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அந்தோனி நகரம் உலகின் லீப் இயரின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு லீப் இயர் விழாவை நடத்துகிறது. இதில் இசை, நடனம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

பவேரியா, ஜெர்மனி
ஜெர்மனியின் பவேரியப் பகுதி அதன் பாரம்பரிய விழாக்களுக்குப் பிரபலமானது, லீப் இயரும் இதற்கு விதிவிலக்கல்ல. பவேரியாவின் தலைநகரான முனிச், நாட்டுப்புற இசை தொடங்கி பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை நடத்துகிறது.

கிர்க் ஜுஃபெல், ஐஸ்லாந்து
நகரத்தின் பிரபலமான கலைகளுடன் இங்கு லீப் இயர் கொண்டாடப்படுகிறது. சுற்றுலாவை மையப்படுத்தியும் இந்த விழா இங்கு களைகட்டுகிறது.

குயின்ஸ்லாந்து, நியூசிலாந்து
உலகின் சாகச தலைநகரம் என்று அழைக்கப்படும் குயின்ஸ்டவுன், சிலிர்ப்பாக லீப் ஆண்டைக் கொண்டாட விரும்புவோர்களுக்கு ஏற்ற இடமாகும்.

டோக்கியோ, ஜப்பான்
இது லீப் ஆண்டைக் கொண்டாட ஒரு உற்சாகமான இடமாக உள்ளது.

லண்டன், இங்கிலாந்து
லண்டன், லீப் ஆண்டைக் கொண்டாட பல்வேறு வகையான சிறப்பு செயல்பாடுகளை வழங்குகிறது.
பல நாடுகள், சுற்றுலாவை மைப்படுத்தி இந்த விழாக்களை நடத்துகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


