10 பில்லியன் டாலர் முதலீடு ஒப்பந்தம்! - கத்தார் - இந்தியா இடையே பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

இந்தியாவிற்கு வந்திருக்கிறார் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹம்மாத் அல்-தானி.

இவரை இந்திய பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றிருந்தார். மேலும், அவர்கள் இருவரும் இரு நாடுகள் இடையே உள்ள உறவு, வணிகம், முதலீடு, எனர்ஜி, பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி முக்கியமாக பேசிக்கொண்டார்கள்.

கத்தார் நாட்டின் முதலீடு துறை இந்தியாவில் தொடங்கப்பட்டு, இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

10 பில்லியன் டாலர்!

இந்திய பிரதமர் மோடி மற்றும் கத்தார் மன்னர் ஷேக் தமீம் இடையே முக்கியமாக பேசப்பட்டதாவது...

  • இருநாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தாவது,

  • இப்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 14 பில்லியன் வணிகம் என்பது அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்,

  • இஸ்ரேல் - காசாவிற்கு இடையே நடக்கும் போர் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்,

  • இந்திய யு.பி.ஐ கத்தாரில் செயல்படுவது,

  • இருநாடுகளின் வணிகம் மற்றும் வெளியிறவுத்துறை அமைச்சர்கள் கொண்ட கூட்டு அமைச்சக குழு,

  • எதிர்காலத்தில் இந்தியா - கத்தார் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்,

  • வணிகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எனர்ஜி கூட்டுறவை மேம்படுத்துதல்,

  • கத்தார் நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவினுடைய இ-விசா வசதியை நீட்டித்தல்,

  • எதிர்காலத்தில் இந்தியா மற்றும் கத்தார் இணைந்து கலாசாரம் மற்றும் நட்பு ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.