ஒரு கையில் மதுக் கோப்பை, மறு கையில் தாய்ப்பால் பம்ப்; சர்ச்சையாகும் நடிகை ராதிகா ஆப்தே பதிவு
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அவர் அடிக்கடி ஆபாச புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் லண்டனைச் சேர்ந்த பெனிடெட் டைலர் என்பவருடன் சில காலம் லிவ் இன் முறையில் வாழ்ந்துவிட்டு அவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெண் குழந்தை பிறந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு லண்டனில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில் ராதிகா ஆப்தே கலந்துகொண்டார். இவ்விழாவிற்கு தனது குழந்தையையும் அழைத்துச் சென்று இருந்தார்.
அப்போது பாத்ரூம் சென்ற ராதிகா, ஒரு கையில் குழந்தைக்கு பால் கொடுக்க தாய்ப்பால் பம்ப் செய்வதும், மறு கையில் மதுக் கோப்பை ஏந்திய நிலையிலும் இருந்தார்.
பாத்ரூமில் அவர் இப்படி நிற்பதை போட்டோ எடுத்த ராதிகா ஆப்தே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை வெளியிட்டு, குழந்தைக்கு பாட்டிலில் பால் அடைக்க பாத்ரூம்பிற்கு அழைத்துச்சென்ற நடாஷா, பாத்ரூம் வரை எனக்காக மது கோப்பையை கொண்டு வந்ததற்கு நன்றி. அம்மாவாக இருந்து கொண்டு வேலை செய்வது கடினமாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரது தாய்மை உணர்வை புகழ்ந்தனர். இன்னும் சிலர் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி மது அருந்தலாம் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். ஒருவர் மது அருந்திக்கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தவறு என்றும், இது குழந்தையை பாதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ராதிகா ஆப்தேயின் செயல் தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். எதையும் வித்தியாசமாக செய்யும் ராதிகா ஆப்தே இதையும் வித்தியாசமாக செய்துள்ளார் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


