Ragging: `அடித்து, முட்டி போட வைத்தனர்; எச்சி துப்பிய தண்ணீரை குடிக்க வைத்தனர் -கேரள ராகிங் கொடுமை
கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் செயல்பட்டுவரும் அரசு நர்ஸிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடூரமாக ராகிங் செய்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேரை காம்பஸ் உள்ளிட்ட கூர்மையான பொருள்கள் மூலம் குத்தி காயம் ஏற்படுத்தியதுடன், மாணவர்களை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் தம்பிள்ஸை கட்டி தொங்கவிட்டும் ராகிங் செய்துள்ளனர். அந்த சம்பவத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், திருவனந்தபுரம் காரியாவட்டம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை 3-ம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
காரியாவட்டம் அரசு கல்லூரியில், கடந்த 11-ம் தேதி சீனியர் மாணவர்களுக்கும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீனியர் மாணவர்களுக்கு ஜூனியர் மாணவர்கள் மரியாதை கொடுக்கவில்லை என பிரச்னை செய்து 3-ம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக்னாலஜி மாணவர் பின்ஸ் ஜோஸின் கை, வாய் ஆகியவற்றை கட்டி எஸ்.எஃப்.ஐ யூனிட் ரூமுக்கு கொண்டு சென்று தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மாணவர் பின்ஸ் ஜோஸ் கூறுகையில், "என்னை யூனிட் ரூமில் கொண்டுசென்று தாக்கியதுடன் முட்டிப்போட்டு நிற்க வைத்தனர். நான் தண்ணீர் கேட்டபோது பாட்டில் தண்ணீரை அவர்கள் தங்கள் வாயில் விட்டு கொப்பளித்து மீண்டும் பாட்டிலில் துப்பி, அந்த எச்சில் தண்ணீரை குடிக்க கொடுத்தார்கள். அதை நான் குடிக்கமாட்டேன் எனமறுத்தபோதும் பலவந்தமாக குடிக்க வைத்தனர்" என்றார்.

இதுகுறித்து கல்லூரி ராகிங் தடுப்புகுழு கல்லூரியில் விசாரணை நடத்தியது. அதில் ராகிங் நடந்தது உறுதியானதைத் தொடர்ந்து மாணவனின் புகாரின் அடிப்படையில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வேலு, பிரின்ஸ், அனந்தன், பார்த்தன், அலன், ஷிரவன், சல்மான் ஆகிய 7 மாணவர்கள் மீது களக்கூட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ அமைப்பின் யூனிட் ரூமில் முதலாம் ஆண்டு மாணவனை கொண்டுபோய் தாக்கிய சம்பவம் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கேரளா கல்லூரிகளில் நடக்கும் ராகிங் சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு சார்பில் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


