ஊத்தா கூத்து மீன்பிடித் திருவிழா: கூடைகளோடு முண்டியடித்த இளைஞர்கள்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இருக்கிறது குளத்துப்பட்டி. இந்த கிராமத்தில் சிறுமா கண்மாய் உள்ளது. இந்த கண்மாயைத் தனி நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், தற்போது கண்மாயில் நீர் குறைந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் ஊத்தா குத்து எனும் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தார். இதற்காக, சமூக வலைத்தளங்களில் மீன் பிடித் திருவிழா நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.




இதனை அறிந்த சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகக் காலை முதல் சம்பந்தப்பட்ட சிறுமா கண்மாய் பகுதியில் குவிந்தனர். இதனிடையே, அந்த கண்மாயைக் குத்தகை எடுத்திருந்த குத்தகைதாரர் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரிடமும் நுழைவு கட்டணமாக ரூ. 200 வசூலித்தார்.

இதனைத் தொடர்ந்து, காலை 9 மணி அளவில் மீன் பிடித் திருவிழா தொடங்கியது. விழா தொடங்கியதும் விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஊத்தா, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடித்தனர். இதில், கட்லா, ரோகு, ஜிலேபி, விரால் உள்ளிட்ட வகை மீன்கள் அரை கிலோவிலிருந்து சுமார் 3 கிலோ அளவு வரை உள்ள மீன்கள் சிக்கின. பெரும்பாலானோருக்கு மீன்கள் சிக்கிய நிலையில் சிலர் மீன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும்போது,
“ஏற்கனவே மீன்பிடிப்பதில் அனுபவம் உள்ளவர்களுக்கு கிலோ கணக்கில் நிறைய மீன்கள் கிடைத்தன.

மீன் பிடிக்கும் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்குக் குறைவாகவும், இன்னும் சிலருக்கு மீன்கள் கிடைக்காத சூழலும் ஏற்பட்டது. எல்லாவற்றையும்விட, இந்த திடீர் மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்டது, உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த மீன்பிடித் திருவிழாவை நடத்தினால், நன்றாக இருக்கும்” என்றார்கள்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


