NASA: ``நாங்கள் கைவிடப்படவில்லை.. -பூமிக்கு திரும்பும் நாள் குறித்து சுனிதா வில்லியம்ஸ்!
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் அடுத்த மாதம் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் மூலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் தங்களுடைய விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ளனர்.
தற்போது, தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர்கள் அளித்தப் பேட்டியில் அடுத்த மாதம் அவர்கள் பூமிக்கு திரும்பவுள்ளதாக கூறியிருக்கின்றனர். அந்தப் பேட்டியில் அவர்கள், `` நாசாவின் க்ரூ - 10 மிஷன் மார்ச் 12-ல் பூமியில் இருந்து கிளம்ப உள்ளது. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நாங்கள் சிக்கப்படவில்லை, கைவிடப்படவில்லை." எனப் பதிலளித்திருக்கிறார்கள்.
க்ரூ - 10 மிஷனின் விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் அதற்கான பணிகள் ஒரு வார காலம் நடைபெறும். தற்போது, விண்வெளி நிலையத்தின் கமான்டராக இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் தனது பொறுப்பை ஒப்படைத்தப் பிறகு க்ரூ - 10 பணிக்காக விண்வெளிக்கு வரும் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சமீபத்தில் ஒரு விண்வெளி வீராங்கனையாக மகத்தான சாதனையை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். மொத்தமாக 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்டு, விண்வெளி வீராங்கனையாக அதிகப்பட்ச நடை நேரத்தை பதிவு செய்து சாதனை படைத்ததுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


