Kumbh Mela: கும்பமேளாவில் பக்தர்களை கவர்ந்த பிஸ்னஸ் பாபா; ரூ.3000 கோடியை கைவிட்டு வந்த தொழிலதிபர்!

உத்தரப்பி0ரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கான இந்துக்கள் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பிரயக்ராஜ் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இக்கும்பமேளாவிற்கு வித்தியாசமான பாபாக்கள் வந்திருந்தனர். புறா பாபா, ஐ.ஐ.டி பாபா, அம்பாசிடர் பாபா, தங்க நகை பாபா என எத்தனையோ வினோதமான பாபாக்கள் கும்பமேளாவில் பக்தர்களை கவர்ந்தனர். தற்போது மேலும் ஒரு பாபா பக்தர்களை கவர்ந்துள்ளார். 3,000 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு உரிமையாளராக இருந்த இந்த பாபா, தனது சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு இப்போது ஆன்மிகத்திற்கு திரும்பி இருக்கிறார். காவி உடையணிந்து கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்து கும்பமேளா மைதானத்தில் வலம் வந்த அந்த பாபாவை பக்தர்கள் பிஸ்னஸ்மென் பாபா என்று சொல்கின்றனர்.

கும்பமேளாவில் பக்தர்களுக்கு துண்டு, சாதுக்களுக்கு போர்வை கொடுத்தபடி அவர் நடந்து சென்ற கொண்டே பேட்டியளித்தபடி செல்கிறார். எப்போதும் தொழில், ஆடம்பர வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை என்று இருந்தவர், உண்மையான மன அமைதியை தேடி 3000 கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தை அப்படியே விட்டுவிட்டு இப்போது ஆன்மிகத்திற்கு திரும்பி இருக்கும் பிஸ்னஸ்மென் பாபா குறித்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவரது வீடியோவை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சிலர் அவர் புதிய தொழில் கண்டுபிடித்திருப்பதாக பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் பிஸ்னஸ் பாபாவிற்கு உண்மையான வறுமை என்னவென்று தெரியாது என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர். கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் செல்வதாக இருந்தால் சில கிலோமீட்டருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்கின்றனர். பிரயக்ராஜ் நகரில் உள்ள லாட்ஜ்கள் முழுவதும் நிரம்பி இருக்கிறது. சில மணி நேரம் லாட்ஜில் தங்குவதற்கு 5 ஆயிரம் வரை லாட்ஜ் உரிமையாளர்கள் கேட்கிறார்கள். கும்பமேளாவிற்கு நாடு முழுவதும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டியில் கூட பக்தர்கள் படுத்தபடி செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.

கும்பமேளாவிற்கு நாடு முழுவதும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டியில் கூட பக்தர்கள் படுத்தபடி செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது.

புனித நீராடிய வளர்ப்பு நாய்

கும்பமேளாவிற்கு பக்தர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் வந்து புனித நீராடி வருகின்றன. வன்ஸ் சாப்ரா என்பவர் தனது குடும்பத்தோடு கும்பமேளாவிற்கு காரில் கிளம்பினார். ஆனால் அவரது வளர்ப்பு நாய் சோராவர் காரில் ஏறிக்கொண்டு இறங்க மறுத்துவிட்டது. இதையடுத்து வளர்ப்பு நாயையும் சாப்ரா கும்பமேளாவிற்கு அழைத்து வந்திருந்தார். அவர் தனது குடும்பத்தோடு வளர்ப்பு நாயையும் புனித நீராடுவதற்கு அழைத்து வந்திருந்தார். அந்த நாயை பார்த்தவுடன் அங்கு புனித நீராடுவதற்கு குவிந்திருந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் சாப்ரா தான் புனித நீராட சென்றபோது தன்னுடன் வளர்ப்பு நாயையும் தூக்கிச்சென்று புனித நீராட வைத்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் அதிகாரிகூட அதனை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

இது தொடர்பான வீடியோவை சாப்ரா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை 7 மில்லியன் பேர் இது வரை பார்த்து இருக்கின்றனர். சோராவருக்கு கர்மா தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று சிலர் பதிவிட்டுள்ளனர். சிலர் அதனை அதிர்ஷ்டக்கார நாய் என்று பதிவிட்டுள்ளனர். கும்பமேளாவில் புதன்கிழமை மகி பூர்ணிமாவையொட்டி 2 கோடி பக்தர்கள் புனித நீராடினர். கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய கும்பமேளா இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. வரும் 28ம் தேதி கும்பமேளா முடிவுக்கு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.