RSS: சோலார் பவர்; நூலகம், க்ளினிக்! - ரூ.150 கோடியில் டெல்லியில் புதிய ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ரெடி!
ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்
டெல்லியில் செயல்பட்டு வந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. பணிகள் தொடங்கப்பட்ட பிறகு கொரோனா தொற்று வந்தது. இதனால் கட்டுமானப்பணிகள் தாமதம் அடைந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ். கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் அமைந்திருக்கிறது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் பயன்படுத்தப்படும்.
இக்கட்டடத்தில் உள்ள மெயின் அரங்கம் அசோக் சிங்கால் பெயரில் செயல்படும். அசோக் சிங்கால் ராமர் கோயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அதனை நினைவு கூறும் வகையில் ஆடிட்டோரியத்திற்கு அசோக் சிங்கால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேசவ் கஞ்ச் (Keshav Kunj) என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் மூன்று டவர்களை கொண்டது ஆகும். சாத்னா, பெரேரா, அர்ச்சனா என்ற பெயரில் மூன்று டவர்களும் அழைக்கப்படும். முற்றிலும் சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் இக்கட்டிடத்தில் இருக்கும் நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இருக்கிறது. அதோடு ஐந்து படுக்கை கொண்ட கிளினிக் ஒன்றும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
150 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தை கட்ட 75 ஆயிரம் பேர் நன்கொடை கொடுத்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் இக்கட்டிடத்திற்கான டிசைனை வடிவமைத்துள்ளார். நவீன தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் வரும் 19ம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது.
இதில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பகவத், செயலாளர் தத்தாத்ரேயா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இக்கட்டிடத்தில் 135 கார்களை நிறுத்த முடியும். புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்ததையடுத்து கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 1962ம் ஆண்டில் இருந்து அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் 2 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள டெல்லி ஆர்.எஸ்.எஸ். கட்டடம் பா.ஜ.க அலுவலகத்தைவிட பெரியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


