Rajat Patidar : இந்த 3 காரணங்களால்தான் ரஜத்தை கேப்டன் ஆக்கினோம் - RCB பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர்

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது கொஞ்சம் சர்ப்ரைஸ் முடிவுதான். ரஜத் பட்டிதரை ஏன் கேப்டனாக தேர்வு செய்தோம் என்பதற்கு பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ள்வர் விளக்கம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் ரஜத் பட்டிதரை கேப்டனாக ஆக்கினோம் எனவும் கூறியிருக்கிறார்.
Rajat

ஆண்டி பிளவர் பேசுகையில், ரஜத்தை கேப்டனுக்கான ஆப்சனாக பார்த்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தது. முதல் காரணம், Calmness & Simplicity. ஒரு தலைவனுக்கு இந்த குணங்கள் ரொம்பவே முக்கியம். குறிப்பாக, ஐ.பி.எல் போன்ற அழுத்தமிக்க தொடர்களில் இந்த குணாதிசயங்கள் ரொம்பவே முக்கியம். அந்த குணங்கள் அவரிடம் இயல்பிலேயே இருக்கிறது. ரஜத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்தோம். சையத் முஷ்தாக் அலி தொடரில் மிக நேர்த்தியாக கேப்டன்சி செய்திருந்தார்.

இரண்டாவதாக அவர் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பேர் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர். அத்தனை பேரின் மீதும் நல்ல மரியாதை கொண்டிருப்பார்.

Rajat

மூன்றாவதாக அவர் கடுமையான மன உறுதி கொண்டவர். ஏற்ற இறக்கங்களின் போதும் வலுவாக இருந்திருக்கிறார். இந்த குணாதிசயங்கள்தான் அவரை கேப்டனாக தேர்ந்தெடுக்க தூண்டியது. என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.