Harry Potter: குப்பையில் கிடந்த ஹாரி பாட்டார் பிரதி; ரூ.22,64,000-க்கு ஏலம்... இளைஞருக்கு ஜாக்பாட்!

பிரிட்டன் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு புனைவு நாவல்களின் தொகுப்புதான் ஹாரி பாட்டார். ஜூன் 30, 1997-ல் இத்தொடரின் முதல் புதினமான ஹாரி பாட்டர் அண்டு த பிலோசபர்ஸ் ஸ்டோன் (Harry Potter and the Philosophers Stone) வெளிவந்தது. அப்போதே உலகளாவிய புகழும், விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிடைத்தது. ஜூலை 2013 நிலவரப்படி 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்திருக்கிறது.

Harry Potter - ஹாரி பாட்டார்

இத்தொடரின் இறுதி நான்கு நாவல்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இந்தத் தொடரின் இறுதி நாவல், வெளிவந்த 24 மணிநேரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் சுமார் 1.1 கோடிப் பிரதிகள் விற்றது. இப்படி சாதனைப் படைத்த இந்த நாவலின் முதல் பகுதி 500 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. அதில், ஒன்று குப்பையிலிருந்து எடுக்கப்பட்டு, ஏலத்துக்கு வந்திருக்கிறது.

இது தொடர்பாக பேசிய டேனியல் பியர்ஸ், ``பைக்ன்டனில் உள்ள NLB ஏல நிறுவனத்துக்கு தூக்கி எறியப்படவிருந்த ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசபர்ஸ் ஸ்டோனின் அரிய முதல் பதிப்பை கொண்டுவந்தேன். இந்த நூல், இறந்த ஒருவரின் உடமைகளில் தூக்கிப் போடவிருந்த குப்பையில் கிடைத்தது. philosopher என்ற வார்த்தையில் ஒரு o விடப்பட்டு எழுத்துப் பிழை இருந்தது. அதை வைத்துதான் இது முதல் பாதிப்பு என்ற அனுமானத்துக்கு வந்து சோதித்தேன்.

Harry Potter - ஹாரி பாட்டார்

முதல் பதிப்பில் 500 புத்தகங்கள் மட்டுமே அச்சிடப்பட்டது. அதில் 300 புத்தகங்கள் பொது நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. மீதமிருந்த 200 புத்தகங்கள் மட்டுமே விற்கப்பட்டது. அதில் ஒரு அறிய புத்தகம்தான் என்னிடம் கிடைத்தது. தற்போது அதை 21,000 பவுண்ட் ஸ்டர்லிங்க்கு (இந்திய மதிப்பு 22,64,608.50) ஏலத்தில் விற்றேன்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.