என்கவுன்ட்டர்: சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை! - தொடரும் தேடுதல் வேட்டை!
சத்தீஸ்கர் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக அரசு கூறுகிறது. அதனால், தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி), சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎப்), மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர். கடந்த ஆண்டு 287 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 837 பேர் சரணடைந்திருக்கின்றனர்.
இதுகுறித்து சத்தீஸ்கர் காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ், ``மகாராஷ்டிர எல்லையில் அமைந்துள்ள பிஜாப்பூர் மவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் பதுங்கி இருந்தவர்களை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


