Budget 2025: ஆந்திராவுக்கு கவிதை... பீகாருக்கு `5 திட்டங்கள் - பட்ஜெட்டில் இடம்பெற்ற விஷயங்கள்!
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசின் முக்கிய தூண்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் என்றே சொல்லலாம்.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு கொடுத்த ஆதரவும், பீகாரில் இருந்து நிதிஷ் குமார் கொடுத்த ஆதரவும் கடந்த ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.
அவர்கள் இரண்டு பேருக்கும் தோதான விஷயங்கள் இன்று தாக்கல் ஆன பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.
பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , தெலுங்கு எழுத்தாளரான குர்ஜாடா அப்பாராவின் தேசமண்டே... என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டினார். இதன் பொருள், `நாடு என்பது அதன் மண் அல்ல...மக்கள் என்று கூறினார்.
இதன் மூலம், ஆந்திர பிரதேசம் பட்ஜெட்டில் இடம்பெற்றது.
இந்த ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தல் வர உள்ளது...மேலும், பாஜக அரசுக்கு நிதிஷ் குமார் ஆதரவு மிக முக்கியமானது.

அதற்கேற்ப பீகாருக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் 5 திட்டங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த திட்டங்களில் பாட்னாவில் ஐ.ஐ.டி விரிவாக்கம், உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.
இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், `இது மத்திய பட்ஜெட்டா... இல்லை பீகார் பட்ஜெட்டா? என விமர்சித்து வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
