மதகஜராஜா வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் பழைய படங்கள்; ஜி.தனஞ்செயன் பட்டியலிடும் படங்கள் என்னென்ன?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த மதகஜராஜா படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புது டிரெண்ட்டை துவக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பல்வேறு நல் உள்ளங்களின் முயற்சியினால் மதகஜராஜா திரைக்கு வந்து, பெரும் வெற்றி பெற்றது. இப்போது தெலுங்கிலும் வெளியாகிறது.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

சமீபத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார், படம் எடுக்கப்பட்டு தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டால் அந்த படம் ஓடாது என்ற வறட்டு வாதத்தை அடித்து நொறுக்கி இருக்கிறது இந்த ப்ளாக் பஸ்டர் வெற்றி. ஒரு மகாமகம் போல கொண்டாடப்பட வேண்டிய இந்த வெற்றி, தமிழ் திரைப்பட துறையினரை உற்சாகப் படுத்தியிருப்பதுடன் தமிழ் சினிமா தலைநிமிரப் போவதற்கான ஒரு அறிகுறியாகவும் அமைந்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்.

சர்வர் சுந்தரம்
சர்வர் சுந்தரம்

சரி இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? பல்வேறு சிக்கல்களால் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. விழா ஒன்றில் கூட விஷால், 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றன என்று பேசியிருந்தார். இப்போது மதகஜராஜாவின் வெற்றி அனைவருக்கும் உற்சாக டானிக்கை அளித்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் ரெடியான விமல், சூரி இணைந்து நடித்த படவா படம் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது போல், 40 படங்கள் அடுத்தடுத்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கோடம்பாக்கத்தில் தகவல்.

ஜி.தனஞ்செயன்

இதுகுறித்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி. தனஞ்செயன் சில ரகசியங்களை உடைக்கிறார்.

பல ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் படங்களைத் திரைக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினரும் முயற்சி எடுத்து வருகிறோம். கிட்டத்தட்ட 30 படங்கள் இந்த காலகட்டத்துக்கும் தகுந்தவாறு, ஓடக் கூடிய படங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

விக்ரம், கௌதம்மேனனின் கூட்டணியில் உருவான துருவநட்சத்திரம், வெட்கட்பிரபு இயக்கியுள்ள பார்ட்டி, சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், லிங்குசாமி தயாரிப்பில் உருவான இடம் பொருள் ஏவல், மிர்ச்சி சிவாவின் சுமோ, சி.வி.குமார் தயாரிப்பில் உருவான டைட்டானிக் காதலும் கவுந்து போகும், காஜல் அகர்வால் நடித்த பாரீஸ் பாரீஸ், கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன், அருண் விஜய் நடித்த பார்டர், வா டீல்.

நரகாசூரன்
நரகாசூரன்

மேலும், பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக், யங்மங்சங், விஜய் ஆண்டனி நடித்த அக்னி சிறகுகள், அரவிந்த்சாமியின் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளப்பார்ட், சரத்குமார், சசிகுமார் இணைந்து நடித்த நா நா, விஷ்ணு விஷாலின் ஜெகஜால கில்லாடி, மோகன் தாஸ், விமல் நடிப்பில் ரெண்டாவது படம், விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ், அமலாபால் நடித்த அதோ அந்த பறவைபோல, ஜி.வி.பிரகாஷ் நடித்த அடங்காதே, 13, சசி இயக்கிய நூறு கோடி வானவில், ஆண்ட்ரியாவின் கா, பிசாசு 2 எனப் பல படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, பெடரேஷன் எனப் பல சங்கங்களும் கலந்து இந்த முயற்சியினை மேற்கொண்டு வருகின்றன.

இதில் முதல்கட்டமாக கௌதம்மேனனின் துருவநட்சத்திரம், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்" என்கிறார் தனஞ்செயன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.