Rahul Gandhi: `காங்கிரஸின் அந்த தவறு... ஒப்புக்கொள்ள தான் வேண்டும்’ - ராகுல் காந்தி
டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துவருகிறது. இது சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது...
"90 களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி என்ன செய்தததோ, அதை செய்திருக்கவே கூடாது. காங்கிரஸ் தலித் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை அப்போது பெற்றிருந்தால், ஆர்.எஸ்.எஸ்-யால் எப்போதும் பதவிக்கே வந்திருக்க முடியாது.
பிரதமர் மோடியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீடு மற்றும் தலித்களுக்கு எதிரானவர்கள். மோடியின் நவீன பதிப்பு கெஜ்ரிவால்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் அவருக்கு தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள்களின் ஆதரவு முழுவதுமாக இருந்தது. ஆனால், 1990-ம் ஆண்டுக்கு பிறகு, அதில் பல பாதிப்புகள் உண்டாகின. அந்த உண்மையை காங்கிரஸ் ஒத்துக்கொள்ள தான் வேண்டும். இப்போது காங்கிரஸ் மீண்டும் இந்த மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் புதிய உள் புரட்சி நடக்கப்போகிறது. அதில் கட்சியில் தலித் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இப்படி தான் காங்கிரஸ் முன்னர் இயங்கியது. இது மீண்டும் காங்கிரஸிற்குள் வந்துவிட்டால், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஓடிவிடும். நாம் ஒற்றுமையை நோக்கி செயல்பட வேண்டும். அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்" என்று பேசியுள்ளார்.
ராகுல் காந்தி சொல்லும் 1990 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி காந்தி குடும்பத்தின் கைகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரதமராக நரசிம்ம ராவ்(1991-96) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

