Union Budget 2025 : மகாலட்சுமியை பிராத்திக்கிறேன்... - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு

நாளை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி.

அதில், "நாளை தாக்கல் ஆக உள்ள பட்ஜெட் தேசிய வளர்ச்சி மற்றும் விக்சித் பாரத்தை முக்கிய நோக்கமாக கொண்டதாகும். இந்த பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் தாக்கல் ஆக உள்ளன. கூடவே, அதில் புதுமை, முதலீடு, ஒன்றிணைப்பு ஆகியவையும் இடம்பெற உள்ளது.

நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொடர்ந்து அருள லட்சுமி தேவியை பிராத்திக்கிறேன். இந்தியா ஐனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் மூன்றாவது முறையாக எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்கள் பல...

இது எங்களது மூன்றாவது முறை ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் ஆகும். 2047-ம் ஆண்டின் மீது முழு நம்பிக்கையோடு சொல்கிறேன்...இந்தியா 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அது வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) மாறியிருப்பதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த பட்ஜெட் வழங்க உள்ளது.

2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும், எதாவது பிரச்னையை கிளப்ப சிலர் தயாராக இருப்பார்கள். ஆனால், 2014-ல் இருந்து இந்தக் கூட்டத்தொடர் தான் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொடங்க உள்ளது" என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.