ஸ்ரீவில்லிபுத்தூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... கூலித்தொழிலாளி போக்சோவில் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி, ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயதான சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கவும், இந்த விஷயத்தை தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பாலியல் தொல்லை அளித்தது குறித்து சிறுமியின் தாய் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்வராஜை போக்சோ வழக்கின் கீழ் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் சிறையில் செல்வராஜை அடைத்தனர்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
