வாணியம்பாடி: இளம்பெண்ணிடம் நெருங்கிப் பழகிவிட்டு, திருமணத்துக்கு மறுப்பு - வங்கி ஊழியர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த தன்ராஜ் (30) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே வங்கியில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள 28 வயது பட்டதாரி இளம்பெண்ணும் பணிபுரிகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமான இரண்டே மாதத்தில், அவரின் கணவர் விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில், ஒரே வங்கியில் பணிபுரிவதால் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டது. திடீரென ஒருநாள் தன்ராஜ் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது காதலை அந்தப் பெண்ணிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். நம்பிக்கை அடிப்படையில், தன்ராஜை காதலிக்கத் தொடங்கினார் அப்பெண். இருவரும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர்.

கைது

இந்த நிலையில், தன்ராஜுக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இதையறிந்த அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மறுத்த தன்ராஜ், தனது அண்ணன் யுவராஜுடன் சேர்ந்து இப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தன்ராஜை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக கொலை மிரட்டலில் ஈடுபட்ட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.