`சீமான் பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? - கேள்வி எழுப்பிய திருமாவளவன்!

சென்னையில் கே.நடராசன் படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம், சீமானின் சமீபத்திய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், “சீமான் ஒரு பொருத்தமில்லாத அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்தியை பின்பற்றுகிறாரா என நினைக்கத் தோன்றுகிறது. தந்தை பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.

திருமாவளவன்

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருந்தார். அப்போது அவரை வீழ்த்த வேண்டும் என்று நிறைய பேர் நினைத்தார்கள். தற்போது சீமானும் அதையே நினைக்கிறார். அவர் பாசிச அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சீமான் பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? என கேள்வி எழுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.