25-01-2025 கடன் தீர தேய்பிறை ஏகாதசி மந்திரம்

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு தகுந்த படி, கடவுள் நமக்கான பொருளாதார கஷ்டங்களையும், கடன் சுமையையும், ஆரோக்கிய ரீதியான சில பல பிரச்சனைகளையும் கொடுத்துள்ளான். இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும், கர்ம வினையிலும், பாவ புண்ணிய கணக்குகளிலும் நம்பிக்கை இருக்கும். உங்களுக்கும் இதில் நம்பிக்கை இருந்தால் இந்த பதிவு உங்களுக்காக.

செய்த பாவங்களை நீக்கி புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்றால், மாதம் தோறும் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி திதி அன்றும், வளர்பிறை ஏகாதசி திதி அன்றும் அந்த பெருமாளை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் இந்த தை மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை ஏகாதேசி மிக மிக சிறப்பு வாய்ந்த ஏகாதசியாக சொல்லப்பட்டுள்ளது.

தை மாதத்தில் வரும் அத்தனை நாட்களுமே சிறப்பு. அதில் இந்த தேய்பிறை ஏகாதசியும் அடங்கிவிடும். நாளைய தினம் 25-1-2025 ஆம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த தேய்பிறை ஏகாதசியை “சபலா ஏகாதசி” என்று சொல்கிறார்கள். இந்த நாளில் நம்முடைய வீட்டில் எளிமையாக வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும், கடன் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும், ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தை மாத தேய்பிறை ஏகாதேசி பரிகாரம்

ஏகாதசிக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது மிக மிக சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். ஆனால் உங்களுடைய உடல் சூழ்நிலையை பொறுத்து, விரதம் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரதம் இருந்தாலும் சரி, விருதுமில்லை என்றாலும் சரி, கடன் தீர, செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உடலும் மனதும் சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில், எந்த தடையும் கிடையாது. நாளை காலை அல்லது மாலை உங்கள் விருப்பம். நேரம் எப்போது கிடைக்கிறதோ ஒதுக்கி கொள்ளுங்கள். காலை 6:00 மணிக்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம். மாலை 6:00 மணிக்கு பின்பாக இரவு 9:00 மணிக்கு முன்பாக எப்போது வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை உங்கள் வீட்டில் செய்யலாம்.

பூஜை அறையில் இருக்கும் பெருமாள் திருவுருவப்படத்திற்கு துளசி இலைகளை போட்டு அலங்காரம் விடுங்கள். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் இரண்டு துளசி இலை, ஒரு துண்டு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காயை போட்டு ஒரு தீர்த்தம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

பெருமாளையும் மகாலட்சுமியையும் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் முன்பாக இருக்கும் பஞ்ச பாத்திர தண்ணீரை மட்டும், எடுத்து உங்கள் கையில் வைத்துக் கொண்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை ஏகாதசி நாள் முழுவதும் சொன்னாலே உங்களுக்கு புண்ணியம் கிடைத்து விடும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இருந்தாலும் பெருமாள் முன்பு வைத்திருக்கும் தீர்த்தத்தை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அந்த தீர்த்தத்தில் இந்த மந்திரத்தின் சக்திகள் அனைத்தும் இறங்கிவிடும். கூடவே உங்களுடைய வேண்டுதலையும் வைக்கலாம். நீங்கள் தீர்த்தத்தை கையில் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்.

ஏகாதசி பெருமாள் மந்திரம்:

ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் !

மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த தீர்தத்தை எடுத்து கொஞ்சமாக நீங்கள் பருகிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரதானமாக கொடுங்கள். இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடலாம். பெருமாளின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பதிவு மிக மிக நல்ல பலனை கொடுக்கும். சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள், தை மாதம் சனிக்கிழமைகளில் இந்த தேய்பிறை ஏகாதசி வந்திருப்பது மிக மிக சிறப்பு. இந்த நாளில் கடன் சுமை தீர இந்த வழிபாட்டை செய்யுங்கள் பிறவி கடனும் அடையும் கைநீட்டி வாங்கிய கடனும் அடையும்.

இதையும் படிக்கலாமே: ஏகாதசி வழிபாடு முறை

இந்த நாளில் உங்களால் முடிந்தால் யாருக்கேனும் அன்னதானம் செய்வது உங்கள் பாவங்களை இன்னும் விரைவாக குறைக்கும். புண்ணிய பலனை உயர்த்தி கொடுக்கும்‌. ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய கடன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கும். கர்ம வினைகளை குறைப்பதற்கு தான் வழிபாடு. கர்மவினையும் செய்த பாவமும் குறைய குறைய கடன் சுமையும் கஷ்டமும், நோய் நொடியும் குறைந்து கொண்டே செல்லும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post 25-01-2025 கடன் தீர தேய்பிறை ஏகாதசி மந்திரம் appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.