``கொஞ்ச நஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே... - வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியினர் மட்டும், 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், வருண்குமார் ஐ.பி.எஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``கொஞ்ச நஞ்சமும் பேச்சா... திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்." என்று யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Varun Kumar Ips (@varunkumaripstn)

ஏற்கெனவே, வருண்குமாரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், கடந்த சில மாதங்களாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் கடுமையாகச் சாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க இணைந்த இந்த நேரத்தில், வருண்குமார் இவ்வாறு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.