விருதுநகர் : `விலை உயர்ந்த டூவீலர் வாங்க லோடு ஆட்டோ திருடிய இளைஞர்கள் - 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக லோடு ஆட்டோவை திருடி விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "காரியாப்பட்டி நான்கு வழிச்சாலை அருகே லிங்கசாமி என்பவர் ஆர்.ஓ. குடிநீர் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். தொழில் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தண்ணீர் லோடு ஆட்டோ மூலமாக கிராம் கிராமமாக எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி ஆர்.ஓ. நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோ மாயமானது. இதுகுறித்து லிங்கச்சாமி காரியாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, ஆட்டோ திருடிக் சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் அருகே, மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான லோடு ஆட்டோ நிற்பதாக போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார், ஆட்டோவை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டுவந்தனர். இதையடுத்து, லோடு ஆட்டோ கண்மாய் அருகே கொண்டுச் செல்லப்பட்டது எப்படி?, ஆர்.ஓ. நிலையத்திலிருந்து ஆட்டோவை யார் திருடிக் சென்றது என விசாரிக்கையில் பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் (வயது 24) என்பவர் ஆட்டோவை திருடிக் சென்றது தெரியவந்தது.

லோடு ஆட்டோ

அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மினரல் வாட்டர் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலைக்கு சேர்ந்த அஜய், அடுத்த சில வாரங்களிலேயே வேலையை உதறிச் சென்றுவிட்டார். தொடர்ந்து, அவரின் நண்பர்களான பணிக்கனேந்தலை சேர்ந்த அருண் பாண்டியன் (23), பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) ஆகியோருடன் கூட்டுச்சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் விலையுயர்ந்த டூவீலர் வாங்க நினைத்த அஜய், அதற்கான பணத்தை தயார் செய்ய ஆர்.ஓ.நிலைய லோடு ஆட்டோவை திருடி விற்க திட்டம் தீட்டியுள்ளார்.

காவல்நிலையம்

அதன்படி, அஜய் மற்றும் அவரின்‌ நண்பர்கள் என மூன்று பேரும் சேர்ந்து லிங்கச்சாமியின் ஆர்.ஓ.நிலையத்தில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவை நள்ளிரவில் திருடிச்சென்றுள்ளனர். லோடு ஆட்டோவை, அப்படியே விற்றால் போலீஸிடம் சிக்கி கொள்வோம் என்பதற்காக, ஆட்டோ பாகங்களை தனித்தனியே பிரித்து விற்பனை செய்ய அஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆட்டோவை, எஸ்.கல்லுப்பட்டி கண்மாய் பகுதிக்கு எடுத்துச்சென்று பதுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில்தான் லோடு ஆட்டோ கேட்பாராற்று கண்மாய் அருகே நிற்பது போலீஸூக்கு தெரியவந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து, அஜய், அருண்பாண்டியன், சக்தி முருகன் ஆகிய 3 பேரையும் காரியாப்பட்டி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்" என கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.