Neeraj Chopra: டென்னிஸ் வீராங்கனையைக் கரம் பிடித்த நீராஜ் சோப்ரா - யார் இந்த ஹிமானி?

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா தனக்கு திருமணம் நடந்ததை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவிற்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும் வென்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நீராஜ் சோப்ரா ஹிமானி மோர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீராஜ் சோப்ரா பகிர்ந்திருக்கிறார். நீரஜ்ஜின் மனைவி ஹிமானிக்கு 25 வயதாகிறது.

நீராஜ் சோப்ரா திருமணம்

டென்னிஸ் வீராங்கனையான இவர் தற்போது அமெரிக்காவில் விளையாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (மேஜர்) படித்து வருகிறார். சோனிபட்டைச் சேர்ந்த ஹிமானி சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். Miranda House Delhi University-ல் உடற்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். சக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நீரஜ் சோப்ராவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து தெரிவித்து வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.