காஸா 3; இஸ்ரேல் 90 - பணய கைதிகள் விடுவிப்பு... இன்னும் எத்தனை நாள்கள் தொடரும் இந்த போர்நிறுத்தம்?

கடந்த வாரம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து, தற்போது இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க தொடங்கியிருக்கிறது.

இதில் முதலாவதாக, பாலாஸ்தீனம் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணைய கைதிகளில் எமிலி டமாரி, ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை காஸாவில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த போர்நிறுத்தம் தொடரும்?!

இதனையடுத்து, இஸ்ரேல் 90 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இது தொடர்பான கொண்டாட்டம் இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையும் மீறி நடத்தப்பட்டது.

இந்த போர் நிறுத்தம் இன்னும் 42 நாட்கள் அமலில் இருக்கும். மேலும், 33 பணய கைதிகளும், கிட்டதட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளும் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்படுவார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கு பிறகு தான், போர் நிறுத்தம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.